Friday 11 January 2013

இதெல்லாம் நமக்கு சரிபடாதா? காலை 7.30க்கு பள்ளி என்பது தமிழக அரசின் புது ஐடியா...



            காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் வரும்.எனவே இரவில் எந்த டி.வி சீரியலில் மாட்டாமல் குழந்தைகள் சீக்கிரம் தூங்க பழகி விடுவார்கள்.பெற்றோரும் தான். இந்த அரசு பஸ்கள் காலையில்,முக்கியமாக மதியத்தில் குழந்தைகளுக்கு மட்டுமே என்பது போல் கூட்டம் இல்லாமல் ஃப்ரீயாக செல்லலாம். கண்டக்டர்களும்
பள்ளிகளுக்கு அருகில் நிறுத்தி அமைதியான முறையில் ஏற்றி வருவார்கள். இப்போ மாதிரி குழந்தைகளை கண்டாலே பஸ்ஸை நிறுத்தாமல் ஓடுவதை போல் செய்ய மாட்டார்கள். சாலைகள் இந்த நேரத்தில் கொஞ்சம் ட்ராஃபிக் குறைவாக இருக்கும் என்பதால் மாணவர்கள் சைக்கிளில் சென்று வருவதை விரும்பி சைக்கிள் உபயோகம் அதிகமாக சான்ஸ் இருக்கே.
                                 
காலையில் கஞ்சி,ஜூஸ்,பால் போன்று நல்லா இரண்டு பெரிய க்ளாஸ் கொடுத்து,காலை சாப்பாட்டை கையில் கொடுத்து விடுவதால்(சப்பாத்தி,பூரி போன்று) குழந்தைகள் ஆரோக்யமாக இருக்குமே. மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு வந்து முழு சாப்பாட்டை சூடாக காய்கறி, கீரைகளுடன் சாப்பிடலாம்.ப்ரைமரியில் படிக்கும் குழந்தைகள் மதியம் வீட்டில் 2 மணிநேரம் தூங்கலாம். பள்ளிகளில் மதிய சாப்பாட்டிற்கு பிறகு ஒரு மணிநேரம் எந்த விதத்திலும் குழந்தைகளை ஒரு பாடத்தின் மீது கவனம் செய்ய வைக்க முடியவே முடியாது. எப்படா பெல் அடிக்கும் என்ற மனநிலையில் தான் கட்டாயத்தின் பேரில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.அந்த நேரத்தில் பெரும்பாலும் போர்டில் எழுதி போடும் வேலை தான் பெரும்பாலும் ஆசிரியர்களின் வேலையாக இருக்கும். புதியதாக பாடம் சொல்லி தருவதை மதிய நேரத்தில் அவாய்ட் செய்து விடுவர்.
                             
இந்த நேரப்படி அம்மா வேலைக்கு போகாமலோ இல்லையென்றால் பாட்டி,தாத்தா அவர்கள் வீட்டிலோ இருக்க வேண்டும். அப்போதான் இந்த முறை நல்லாயிருக்கும்.எனவே கூட்டு குடும்பத்தின் அருமை மக்களுக்கு புரியும்.இல்லாட்டி ஏற்கனவே மாலை 4,5 மணியிலிருந்து வேலைக்கு போன அம்மாவிற்கு காத்து இருக்கும் குழந்தைகள் இப்போ மதியத்திலிருந்து காத்து கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். AFTER SCHOOL என்ற பள்ளிகள் அல்லது டியூஷன் செண்டர் புற்றீசல் போல் முழைத்து சம்பாதிக்க தொடங்கும். மேட்னி-ஷோக்கள் தியேட்டர்களில் கொடிக்கட்டும். டீன் - ஏஜ் குழந்தைகள் நன்கு சுத்த ஆரம்பிக்கும்.டைம் அதிகம் கிடைப்பதால் மாணவர்களின் நெட் உபயோகம் அதிகரிக்கும்.
                            
தனியார் பள்ளிகள் மாணவர்களை மதியம் விட்டால் கூட ஆசிரியர்களை மதியம் வீட்டிற்கு விட ரொம்ப யோசிப்பார்கள். ஆசிரியர்கள் 4 மணிவரை கட்டாயம் பள்ளியில் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அவர்களுக்கும் வீடு மற்ற வேலைகள் இருக்குமென்ற கவலையே கொள்ள மாட்டார்கள்.இதில் பெரும் பாதிப்பு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தான். தனியார் பள்ளிகளில் 90% பெண்கள் தான் ஆசிரியராக பணியில் இருக்கிறார்கள். ஆசிரியர் பணியில் ஈடுபாடு இனி வரும் காலங்களில் இந்த நேர மாற்றத்தால் இளைஞர்களுக்கு குறைந்து விட வாய்ப்பு உள்ளது.
என்ன செய்யலாம்?
                      3
கி.மீட்டருக்குள்ளே தான் வீடும் பள்ளியும் இருக்க வேண்டும் என்பதை அனைத்து பெற்றோரும் கட்டாயம் கடைபிடித்தாலே இந்த பிரச்சனை பெரிதும் தீரும்.சைக்கிளுக்கென்று சாலையில் தனி பாதை ஏற்படுத்தினால் இன்னும் நல்லாயிருக்கும்.சைக்கிளில் வரும் மாணவர்களுக்கு பள்ளியில் ஏதேனும் மார்க் உண்டு என்று கூறினால் சோம்பேறிகளாகி கொண்டு இருக்கும் மாணவ சமுதாயம் சைக்கிளை உபயோகப்படுத்த தொடங்கும்.தனியார் பள்ளிகள் சம்பாதிக்க வேண்டி வாங்கி வைத்திருக்கும் பேருந்துகளை தொலைவில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பயன் படுத்தலாம்.
                              
என் பையன்கள் இருவரும் தாம்பரம் கேந்திரிய வித்யாலயாவில் 10 வருடம் படித்தனர். அப்போது காலை 7.30-2 மணி வரை பள்ளி நேரம்.காலை 8.30க்கு டிஃபன் ப்ரேக். டவுண் பஸ்ஸில் 3 கி.மீட்டர் சென்று வந்தார்கள். காலை கூட்டம் இருந்தாலும் மதியம் அரசு பேருந்தில் அந்த பள்ளி மாணவர்கள் மட்டுமே சந்தோஷமாக வருவார்கள். அந்த பள்ளி மாணவர்கள் மற்ற பள்ளி மாணவர்களை விட மிக சுறுசுறுப்பாய் இருப்பார்கள் இதை நான் மற்ற பள்ளி ஆசிரியர்கள் சொல்லி கேட்டு இருக்கிறேன்.நேரிலும் பார்த்து இருக்கிறேன். மதியத்திலிருந்து இரவு வரை நேரம் அதிகம் இருக்கும்.வீட்டு பாடங்கள் படிக்க செய்ய அதிக நேரம் இருக்கும்.மற்ற டியூஷ்னகளுக்கும் செல்ல நேரம் கிடைக்கும்.இந்தியாவில் இருக்கும் அனைத்து கேந்திரிய வித்யாலயாவும் இந்த நேரத்தில் தான் செயல்பட்டன. ஷில்லாங்,ஊட்டியில் இருக்கும் குழந்தைகளும் காலை குளிரில் இந்த நேரத்திற்கு பழக்கபட்டே இருக்கிறார்கள்.
                                             
நான் சிட்டியில் இருக்கும் பள்ளிகளை மட்டும் கருத்தில் கொண்டு இதை எழுதி இருக்கிறேன். கிராமத்து பள்ளிகளுக்கு இந்த டைம் சரி படுமா தெரியலை. எனினும் மதிய நேரத்தில் வீட்டிற்கு வருவதால் அவர்களுக்கும் பிரச்சனை இருக்காது என்றே நினைக்கிறேன். தூரமாய் இருக்கும் வீட்டிற்கு இருட்டும் முன்பே போகலாம் .இருட்ட ஆரம்பிக்கும் முன்பே பாடங்களை பாதியாவது படித்து முடிக்கலாம். (கரெண்ட் பிரச்சனை).பார்க்கலாம் என்ன டைம் அரசு முடிவு செய்கிறார்கள் என்று
?

No comments:

Post a Comment