Thursday 3 January 2013

கிளிகளில் திருக்குறள் வெளியிட்டு ஓவிய ஆசிரியர் சாதனை



             காரைக்குடியை சேர்ந்த ஓவிய ஆசிரியர் பார்த்திபன், கிளிகள் (பேப்பர்) மூலம், திறக்குறளின் 133 அதிகாரங்களை வெளியிட்டு, நூதனமுறையில் ஆங்கில புத்தாண்டை வரவேற்றுள்ளார். பறவை, விலங்கினங்கள் தெய்வத்தின் அவதாரங்களாக உள்ளன. ஆனால், கிளி மட்டுமே, மீனாட்சி, ஆண்டாளின் கைகளில் வீற்றிருக்கின்றன. அந்த வகையில், பச்சை கிளிக்கு மகத்துவம் தரப்படுகிறது. அந்த வகையில்,
காரைக்குடியை சேர்ந்த ஓவிய ஆசிரியர் பார்த்திபன், தனது முயற்சியால், ஆங்கில புத்தாண்டு (2013) பசுமையான ஆண்டாக அமையவேண்டியும், புத்தாண்டை செந்தமிழால் வரவேற்கும் விதமாக, பச்சை கிளிகளை (பேப்பர்) தயாரித்து, ஒவ்வொரு கிளியிலும் ஒவ்வொரு அதிகாரம் வீதம், 1300 குறள்களை 133 கிளிகளில் எழுதி சாதித்துள்ளார்.
                              
இதில், ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த கிளிகள்(குறள்) மீது அறத்துப்பால், மற்றொரு மரத்தில் இருக்கும் கிளிகளில் இன்பத்து பால், வேடம் அணிந்த குழந்தைகள் பறக்கவிடும் கிளியில், பொருட்பால்களிலான குறள்களை எழுதியுள்ளார். இவர், ஏற்கனவே 10 நிமிடத்தில் திருக்குறளை எழுதிய சாதனை, ஒரு செ.மீ., நீளம், 0.5 செ.மீ., அகலமுடைய ஓவிய புத்தகம் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். தொடர் சாதனையில், இவர் தற்போது, கிளிகளில் திறக்குறளை எழுதி சாதித்துள்ளார். ஓவிய ஆசிரியர் பார்த்திபன் கூறுகையில், "இறைவனுக்கு தூது அனுப்பப்படும் கிளிகள், இன்று இயற்கை சூழலோடு அமைந்த மரங்களுக்கு தூது விடுகின்றன. இச்சாதனை முயற்சியான பேப்பர் கிளிகளில், திறக்குறள் எழுதும் பணியில் 6 மாதம் ஈடுபட்டுள்ளேன்,'' என்றார்
.

No comments:

Post a Comment