Friday 4 January 2013

ஆசிரியர்கள் கண்டிப்பு : தேர்வெழுத மாணவர்கள் மறுப்பு



               பாகனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு வகுப்பிற்கு ஒத்துழைக்காத பிளஸ் 2 மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்ததால், தேர்வு எழுத மறுத்து,முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் செய்தனர். இப்பள்ளியின் பிளஸ் 2 அறிவியல் பிரிவில், 13 மாணவர்கள், 13 மாணவிகள்
படிக்கின்றனர். கூடுதல் மார்க் எடுக்க வைக்கும் நோக்கில், அந்தந்த பாட ஆசிரியர்கள் காலை,மாலையில் தலா ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது அரையாண்டு தேர்வையொட்டி சிறப்பு வகுப்பு நடக்கிறது. இயற்பியல் தேர்வுக்கான மாலை நேர சிறப்பு வகுப்பை 13 மாணவர்கள் புறக்கணித்தனர்.நேற்று காலை தேர்வு எழுத வந்தபோது,அவர்களை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கண்டித்தனர். இதையடுத்து,மாணவர் சங்கத்தினர் உதவியோடு 12 மாணவர்கள்,தேர்வெழுத ஆசிரியர்கள் அனுமதி மறுப்பதாக கூறி, முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணனிடம் புகார் அளித்தனர். இவர்களை சமாதானப்படுத்திய சி...,12 பேரையும் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி, தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார்.
                                தலைமை ஆசிரியர் கூறுகையில், "அதிக மார்க் பெற வைக்க சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கு ஒத்துழைக்காமல் தேர்வெழுத வந்த 13 பேரை நேற்று கண்டித்தோம். சிறிது நேரம் கழித்து எழுத அனுமதிக்கலாம் என்றபோது, ஒருவர் தவிர, 12 பேர் சி...,வை சந்தித்திருக்கின்றனர். அவரது உத்தரவுப்படி 12 பேருக்கும் இயற்பியல் தேர்வு நடத்தப்படும். தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இல்லை ' என்றார்.

No comments:

Post a Comment