Friday 4 January 2013

தோல்வியடைவோருக்கு உடனடியாக துணைத்தேர்வு: துணைவேந்தர்



               மருத்துவப் படிப்புகளுக்கான ஆண்டுத் தேர்வில், தோல்வியடையும் மாணவர்களுக்கு, உடனடியாகத் துணைத் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை துணைவேந்தர், சாந்தாராம் உறுதி அளித்துள்ளார். மருத்துவப் பல்கலை துணைவேந்தர், சாந்தாராமை, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து, மருத்துவ
மாணவர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரினர்.இது குறித்து, சங்கத்தின் பொதுச் செயலர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேர்வு விடைத் தாள் மறுமதிப்பீடு தவிர, பிற கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக, துணைவேந்தர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆண்டுத் தேர்வில் தோல்வியடையும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர்கள், தற்போது, ஆறு மாதம் கழித்துதான், துணைத் தேர்வு எழுத வேண்டி உள்ளது.
                           
இதனால், அவர்களின் ஓர் ஆண்டு வீணாகிறது. இதைத் தவிர்க்க, அடுத்த கல்வியாண்டு முதல், ஆண்டுத் தேர்வில் தோல்வியடையும் மருத்துவ மாணவர்களுக்கு, ஒரு மாதத்திற்குள், துணைத் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, துணைவேந்தர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு, ரவீந்திரநாத் தெரிவித்து உள்ளார்
.

No comments:

Post a Comment