Monday 7 January 2013

மதுரையில் கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி



click here press release no 07 dt 7/01/2013
              மதுரையில் கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க ரூ.2 கோடியே 22 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகமாக வசிக்கும் பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சார்ந்த மக்களின் நலனுக்காக 24 மேல்நிலைப் பள்ளிகள், 25 உயர்நிலைப் பள்ளிகள், 25 நடுநிலைப் பள்ளிகள், 211 ஆரம்பப் பள்ளிகள் என மொத்தம் 285 அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 37,556 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
                        
இப்போது மதுரை மாவட்டத்திலுள்ள செக்கானூரணியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுமியருக்கு என தனியே செக்கானூரணியில் அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்இப்பள்ளிக்கு கட்டிடம் கட்ட, ஆய்வக மற்றும் விளையாட்டு உபகரணங்கள், மேசை, நாற்காலி மற்றும் பீரோ போன்ற தளவாட சாமான்கள் வாங்குவதற்காக 2 கோடியே 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தவிர, பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்பு நிறுவனங்களில் பழுதுபார்ப்பு மற்றும் சிறப்புப் பணி மேற்கொள்வதற்காக, மாநில அளவில் வக்பு நிறுவன மேம்பாட்டு நிதி ஒன்றினை துவக்குவதற்கும், இதற்கு தேவையான நிதியினை கொடையாளர்களிடமிருந்து பெறுவதற்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிதிக்கு அரசு மானியமாக 2012-13ம் நிதியாண்டில் 3 கோடி ரூபாய் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment