Tuesday 8 January 2013

அனைத்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் TET-ல் இருந்து விலக்கு என்பதை சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்



            அனைத்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு என்பதை சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல் அனைத்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் ஆசிரியர் தகுதி
தேர்வில் இருந்து விலக்கு என்பதை சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
ஆலோசனைக்கூட்டம்
                              
ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஆலோசனைகூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்க மாநில தலைவர் ராகராமு முன்னிலை வகித்தார். பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அரிகிருஷ்ணன் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை செல்வமணி வரவேற்றார். தமிழாசிரியர் சங்க மாநில செயலாளர் சந்திரசேகரன், சங்கர், சுந்தர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். கூட்டத்தில் இளவரசன், சக்திவேல், அருண்குமார், அமிர்தலிங்கம், வசந்தி, சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
                                       2010–
ம் ஆண்டில் ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டு தற்போது பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் காலஅவகாசம் தந்துள்ளதை போல் இவர்களோடு சான்றிதழ் சரிபார்ப்பினை முடித்த 7 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 23–6–12 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துள்ள 400 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் அதே நடைமுறையில் பணி வழங்கி பாலஅவகாசம் தந்து ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த வேண்டும். 23–8–10 தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இலவச கட்டாய கல்வி சட்ட சுற்றறிக்கையின்படி கீழ்கண்ட பிரிவுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு விதிவிலக்கு நடைமுறை அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இவ்வாறு 23–8–2010–க்கு முன்னர் உள்ள பணியிடங்களை பழைய நடைமுறை விதிகளின்படியே நேரடி நியமனம் செய்து காலஅவகாசம் தந்து ஆசிரியர் தகுதி தேர்வை நடத்திட வேண்டும். அறிவிக்கப்பட்ட அனைத்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு என்பதை சட்டப்பூர்வமான அறிவிப்பு ஆணையாக வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற 9–ந்தேதி முதல்அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
.

No comments:

Post a Comment