Saturday, 9 March 2013

10, +2 மாணவர்களுக்கு உதவித் தொகை



            பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பி.டெக் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி உதவித் தொகையை வழங்குகிறது, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள NIIT பல்கலைக் கழகம். பத்தாம் வகுப்பு
மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் இந்த கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 2013 ஏப்ரலில் பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் NIIT பல்கலைக் கழகத்தில் பி.டெக் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
                           
விண்ணப்பிக்க கடைசி நாளாக ஜனவரி 31-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ளbtech@niituniversity.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். மேலதிக விவரங்களுக்கு www.niituniversity.in என்ற இணைய தளத்தை அணுகலாம்
.

No comments:

Post a Comment