"வெளிநாடு சென்று, மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள, ஒவ்வொரு பல்கலைக்கும் ஆண்டுதோறும் தலா 20 லட்ச ரூபாய் அரசு ஒதுக்குகிறது,'' என உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசினார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர்
பல்கலைக்கழகத்தில், மகளிர் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடந்தது. உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா வர்மா, துணைவேந்தர் மணிமேகலை, பேராசிரியை சிந்தியா பாண்டியன் பேசினர்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது: அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, வெளிநாடுகளுக்கு மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் குழுவில் 25 மாணவ, மாணவியர் மற்றும் 5 பேராசிரியர்களோடு, நானும், உயர்கல்வித்துறை செயலர், உயர்கல்வி மன்றத்தை சேர்ந்தோரும் லண்டன் சென்றோம். லண்டனில் கல்வி, வேலை வாய்ப்பு, தொழிலில் முன்னேறி உள்ளனர். வெளிநாடு சென்று, மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஆண்டுதோறும் தலா 20 லட்ச ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது, என்றார். பேராசிரியை ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment