பள்ளிகளில் 2வது ஷிப்ட் நடத்த அனுமதிப்பதி பற்றி மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இந்த தகவலை மாநில கல்வி அமைச்சர் கிரன் வாலியா கூறினார்.இதுபற்றி நிருபர்களிடம் கிரன் வாலியா கூறியதாவது: நகரில் இருக்கும்
அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் சார்பில் 2வது ‘ஷிப்ட்’ நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. பள்ளிக்கூடங்களில் இருக்கும் கட்டமைப்பு வசதிகளை முழுமையாக பயன்படுத்த இதுபோன்ற அனுமதி கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் தங்கள் கோரிக்கையில் தெரிவித்துள்ளனர்.இதுபற்றி ஆராய மாநில அரசு சார்பில் ஏற்கனவே ஒரு நிபுணர் குழு போடப்பட்டுள்ளது. அந்த நிபுணர் குழு தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்த பிறகு அந்த அறிக்கை பற்றி மாநில அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அமைச்சர் கிரன் வாலியா கூறினார்.
No comments:
Post a Comment