டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவியிலிருந்து நேற்றுடன் ஓய்வு பெற்ற நட்ராஜ், தன் பணி காலத்தில் நடந்த, சீரமைப்புகள் பற்றி பட்டியலிட்டார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், அவர் நேற்று பேசியதாவது: முதன் முறையாக பணியாளர் தேர்வாணையம்
மூலம், 2012-13ம் ஆண்டில் நடக்கும் தேர்வுகள் பற்றிய அறிவிப்பை ஆண்டு துவக்கத்திலேயே வெளியிட்டோம். இதில், 33 பதவிகளுக்கு, 17,952 பேர் தேர்வு செய்யப்படுவர் என, கூறினோம். கடந்த ஓராண்டில், தமிழக அரசு துறையில் உள்ள, 57 பதவிகளுக்கு, 25,453 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
முதல் முறையாக, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு எழுத தகுதியானோர், ஆன்-லைனில் பதிவு செய்யும் முறையை கொண்டு வந்தோம். இதில், 19.20 லட்சம் பேர் பதிவு செய்தனர். இவர்கள், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்குத் தகுதியானவர்கள். ஒவ்வொரு முறையும், விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேர்காணல் உள்ளிட்ட, ஒவ்வொரு தேர்வு நிலைகளும் வீடியோவில் பதிவு செய்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தோம். தேர்வு முறைகள் அனைத்தும், கணினிமயமாக்கப்பட்டுள்ளன. தேர்வு விடைத்தாள் வெளியிடப்பட்டு, ஆட்சேபனை பெறப்படுகிறது. பாடத்திட்டங்கள் ஒவ்வொரு முறையும், தரம் உயர்த்தப்படுகின்றன. தேர்வு முறைகளும் மேம்படுத்தப்படுகின்றன. இவ்வாறு நட்ராஜ் கூறினார்.
No comments:
Post a Comment