Tuesday, 12 March 2013

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில ஆய்வகம்!



                                        அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளிலும் ஆய்வகப் பணிகள், கணினிப் பணிகள், அலுவலகப் பணிகள் போன்றவை தொய்வில்லாமல் நடைபெறவும், கற்றல் கற்பித்தல் பணிகள் தொய்வின்றி சிறந்து மேலோங்கவும் அனைத்து சென்னை உயர்நிலை
மற்றும் மேனிலைப் பள்ளிகளிலும் ஜெனரேட்டர் நிறுவப்படும். மாணவர்கள் பள்ளிகளிலேயே, நுண்கலை மற்றும் பண்பாட்டு அறிவைப் பெறும் வகையில், கைவினைக் கலைகள், ஓவியம், வண்ணம் தீட்டுதல், இசைக்கருவி மீட்டல், நடனம் போன்ற பல நுண்கலைகளைக் கற்பிக்கும் வகையில் கலைக் கூடம், 10 பள்ளிகளில் உருவாக்கப்படும்.
                                       
உலகத் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் மாணவர்கள் சிறந்த அறிவைப் பெற்றிட 15 சென்னை நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில ஆய்வகம் அமைக்கப்படும். இந்த ஆங்கில ஆய்வகங்களின் மூலம் மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, ஆங்கிலத்தில் எழுதும் திறன் மேம்படுத்தும் பயிற்சி ஆகியன அளிக்கப்படும். 6 முதல் 10-ம் வகுப்பு வரைப் பயிலக்கூடிய அனைத்து சென்னை உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் கணினி அறிவை வளர்த்திட ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணினி ஆசிரியர் நியமிக்கப்படுவர். சென்னை மழலையர் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வண்ணச் சீருடைகளும், காலணிகளும் வழங்கப்பட உள்ளன. அவை சின்னஞ் சிறார்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும்.
                              
மாணவர்களுக்குக் கலை, கலாச்சாரத்தை ஒருங்கிணைத்த அனுபவத்தை அளித்திட, கலை நயமிக்க பல்வேறு குடும்பங்களின் இருப்பிடத்தை நினைவு படுத்தக் கூடிய தட்சன் சித்ரா என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் சென்னைப் பள்ளிகளில் 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்கள் அங்கேயே தங்கி நமது கலைகளையும், கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்ளக்கூடிய கனவுப் பட்டறைகளாக விளங்கும் வகையில் 30 உறைவிட முகாம்கள் நடத்தப்படும். சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் இயங்கக் கூடிய 30 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் உடல் மற்றும் மன உறுதியை உண்டாக்கும் வகையில் இயற்கைச் சூழலுடன் கூடிய, விளையாட்டு உபகரணங்கள் நிறைந்த விளையாட்டுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
                          
இடவசதி உள்ள உயர்நிலை, மேனிலைப்பள்ளிகளில் புதிதாக கணித ஆய்வகங்கள் உருவாக்கப்படும். மேலும் இட வசதி இல்லாத பள்ளிகளில் இடவசதி செய்து தரப்பட்டு கணித ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகர மக்களின் வரவேற்பையும், தேவையையும் கருத்திற்கொண்டு சிறந்த சூழலுடன் கூடிய 10 மழலையர் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படும். பள்ளியளவிலேயே இளம் அறிவியல் அறிஞர்களை உருவாக்கிட ஒவ்வொரு மண்டலத்திலும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படும். மண்டல அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப் பெற்று சிறந்த அறிவியல் படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
                                  
மேலும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பள்ளியில் நிரந்தர அறிவியல் கண்காட்சியகம் அமைக்கப்படும். நம் தேசிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி விளையாட்டை ஊக்குவிக்கவும், மாணவர்களின் உடல் வளத்தைப் பேணி வளர்க்கும் விதத்திலும் சென்னைப் பள்ளி மாணவர்களுக்கிடையே கபடி விளையாட்டுப் போட்டிகள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். தகுதி வாய்ய்ய்ய்ந்த 10 மாணவர்களுக்கு சர்வதேசத் தரத்தில் நீச்சல் பயிற்சி அமைக்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்புப் பயிலும் மாணவ மாணவியருக்கு குடும்பம் மற்றும் சமூகத்தினால் ஏற்படும் மன அழுத்தத்தைக் களையவும் வளர் இளம் பருவ மாணவியர்கள் எதிர்கொள்ளும் உடல், மனச் சிக்கல்களை அகற்றிடவும் தகுந்த பயிற்சி பெற்ற நலவாழ்வு ஆலோசகர் மண்டலத்திற்கு ஒருவர் என்ற எண்ணிக்கையில் பள்ளிகளுக்கே சென்று பணிபுரியும் வகையில் நியமிக்கப்படுவார்.
                            
தற்போது 99 சென்னை தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. ஆங்கில வழி வகுப்புகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்திட பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெற்றோர்களின் விருப்பத்தைக் கருத்திற்கொண்டு 20 சென்னைத் தொடக்கப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியுடன் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கும் வகையில் ஒன்றாம் வகுப்புகள் தொடங்கப்படும். சென்னைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான மதிப்பெண் தரப் பட்டியலில் இடம்பெற்றிட, தகுதி வாய்ந்த 500 மாணவர்களை, சென்னை உயர் மற்றும் மேனிலைப் பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுத்து 50 மாணவர்களுக்கு ஒரு மையம் வீதம் 10 மையங்களில் பாடத்தில் நிபுணத்துவம் வாய்ந் தவர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்
.

No comments:

Post a Comment