ஊரக திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அடுத்து வரும் வகுப்புகளிலும் 50 சதவீத மதிப்பெண்கள் பெறா விட்டால் கல்வி உதவித் தொகை வழங்குவது நிறுத்தம் செய்யப்படும் என பள்ளிக் கல்வி துறை
உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும், கிராமங்களில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதில், கிராமப் பகுதி பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், குறிப்பிடும் படியாக 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 8-வது படித்து வரும் மாணவ, மாணவிகள் தான் இத்தேர்வுகளில் பங்கேற்க முடியும்.இத்தேர்வு குறிப்பிட்ட நாளில் அந்தந்த மாவட்டங்களில் குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்று மதிப்பெண்கள் அதிகம் பெற்று முதலிடம் பெறும் 50 மாணவர்களுக்கும், 50 மாணவிகளுக்கும் தலா ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இத்தொகை 9,10,11-வது மற்றும் 12-வது வரையில் வழங்கப்பட்டு வந்தது.
No comments:
Post a Comment