அரசு தொடக்கப்பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இருந்தும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது. மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொடக்க பள்ளிகளின் நிலை
நாளுக்கு நாள் மாறி வருகிறது. பெரும்பாலான தொடக்க பள்ளிகளில் புதிய வகுப்பறை, காம்பவுண்ட் சுவர், கம்ப்யூட்டர், விளையாட்டு உபகரணம் என எஸ்.எஸ்.ஏ., நிதியில் கீழ், அனைத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மட்டக்கண்டி அரசு தொடக்க பள்ளியில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மாணவர்கள் குறைந்து வருவது ஆசிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.
இது குறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், " கல்வித்துறை அதிகாரிகள் எவ்வளவு தான் அறிவுரை கூறினாலும், பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களின் சேர்க்கையில் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பது தான் உண்மை. சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு ஆசிரியர்கள் நேரடியாக சென்று பெற்றோரை சந்தித்து பேசி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். ஒரு ஆசிரியர் 5 மாணவர்களை கட்டாயமாக பள்ளியில் சேர்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என்றார்
No comments:
Post a Comment