Friday, 1 March 2013

மாணவர்களை திட்டினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை



            மாணவ-மாணவிகளை கன்னத்தில் அறையக்கூடாது. கம்பால் அடிக்கக் கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ளது. மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்த கூடாது என்று தடை விதித்து இருப்பது போல மனதளவிலும் துன்புறுத்தக்கூடாது என்று தற்போது புதிய சட்டம் கொண்டு
வரப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி மாணவ- மாணவிகள் மனம் புண்படும்படி ஆசிரியர்கள் பேசக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சிறிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை முட்டாள் என்பது போன்ற வார்த்தைகளால் திட்டக்கூடாது என்று சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முட்டாள் என்று திட்டும் ஆசிரியர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுமாணவ-மாணவிகளிடம் அன்பாக பழக வேண்டும். இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கலாம் என்று மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை கருத்து தெரிவித்துள்ளது. இதற்கிடையே மாணவ குழந்தைகளை திட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற புதிய சட்டத்துக்கு ஆசிரியர்கள் மத்தியில் பரவலாக எதிர்ப்பும் ஆதரவும் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment