அச்சிறுப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் செல்லப்பாவுக்கு போபாலில் நடந்த விழாவில் சிறந்த தொழிற்கல்வி ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. அச்சிறுப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக
எஸ்.செல்லப்பா பணியாற்றுகிறார். இவருக்கு தமிழக அரசு பரிந்துரையின் பேரில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற விழாவில் 2011-12ம் ஆண்டுக்கான சிறந்த தொழிற்கல்வி ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை என்சிஇஆர்டி நிறுவன செயலாளர் பேராசிரியர் சந்திப்குமார், இணை இயக்குனர் ஆர்.பி.சிவகுண்டே ஆகியோர் வழங்கினர். விருது பெற்று திரும்பிய ஆசிரியர் செல்லப்பாவை அச்சிறுப்பாக்கம் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
No comments:
Post a Comment