Thursday, 7 March 2013

வாக்காளர் பட்டியலில் கல்லூரி மாணவர்களை சேர்க்க சிறப்பு முகாம்



            வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கல்லூரி மாணவர்களிடம் விண்ணப்பம் பெறும், சிறப்பு முகாம்களை நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.  2014ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக,தேர்தல் கமிஷன் ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளது. செப்.,முதல்
வாரத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் நோக்கில், அந்தந்த தாசில்தார், ஆர்.டி.., அலுவலகங்களில் புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறதுஇந்நிலையில்,18 வயது பூர்த்தியானவர்களை, உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, கல்லூரிகள் தோறும் சிறப்பு முகாம்களை நடத்தி, 18 வயது பூர்த்தியானவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, தேர்தல் பிரிவு தாசில்தார்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதுஇந்த பணியை தடையின்றி நடத்தி, 100 சதவீத புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment