Saturday, 29 December 2012

பிளஸ் 2: முதல்வரின் தகுதி பரிசுத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு



                                ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் முதல்வரின் தகுதி பரிசுத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
click here to download the Press Release 
                              
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பயின்று தொடர்ந்து கல்வி பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த முதல் ஆயிரம் மாணவர்கள் மற்றும் முதல் ஆயிரம் மாணவிகளுக்கு முதல்வரின் தகுதி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
                               
பிளஸ் 2 படிப்பைத் தொடர்ந்து அல்லது ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் மேல்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ரூ.3 ஆயிரம் வீதம் ஐந்தாண்டுகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். மாணவர்கள், 1069 மதிப்பெண்களும், மாணவிகள் 1082 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 2011-12-ம் கல்வியாண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் முதல்வரின் தகுதி பரிசுத் தொகையினைப் பெற்று தொடர்ந்து புதுப்பிக்கும் மாணவர்கள், அடுத்த நிதியாண்டு முதல் (2012-2013) ரூ.3 ஆயிரம் பெறலாம். நடப்பாண்டு (2012) மார்ச்சில் நடைபெற்ற பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்கள் மட்டும் தங்களது பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ் மற்றும் மேல்படிப்புக்கான மதிப்பெண் பட்டியல் நகல்களுடன் தங்கள் கல்லூரி அமைந்துள்ள மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு கல்லூரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.

No comments:

Post a Comment