Sunday 30 December 2012

தொடக்கப் பள்ளி கூட்டணி சார்பில் ஜன.,5ல் தற்செயல் விடுப்பு ஆசிரியர்கள் முடிவு



            மதுரையில், தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஜன.,5ல் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், தற்செயல் விடுப்பு (சி.எல்.) எடுத்து ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
அனைத்து மாவட்டங்களிலும் ஜன.,5 ஆர்ப்பாட்டம் நடத்த இச்சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, ஜன.,5ல், அனைத்து மாவட்டங்களிலும், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், ஆசிரியர் பள்ளித் தொகுப்பு கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால், ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஆர்ப்பாட்டம் நடத்த,முன்கூட்டியே தேதி முடிவு செய்துவிட்டோம். ஆனால், ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாமல், ஜன.,5ல் கலந்தாய்வு அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. இக்கூட்ட தேதியை மாற்றாவிட்டால், தற்செயல் விடுப்பு (சி.எல்.) எடுத்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போம் என்றார்.

No comments:

Post a Comment