Saturday 29 December 2012

72 பள்ளிகளில் ரூ.2.58 கோடியில் அடிப்படை வசதி



                    திருப்பூரில், 2.58 கோடி ரூபாய் செலவில், 72 மாநகராட்சி பள்ளிகளில், அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, சீரமைக்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில், குடிநீர், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தன. மேல்நிலைத் தொட்டி அமைத்து
தண்ணீர் வசதியும், கழிப்பிடம் அமைத்துக் கொடுக்கும்படி, தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிகளை சீரமைத்து, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி முதல் மண்டலத்தில் உள்ள 12 மாநகராட்சி பள்ளிகளில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இரண்டாவது மண்டலத்தில் 32 பள்ளிகளில் 65 லட்சம் ரூபாய் செலவிலும், மூன்றாவது மண்டலத்தில் 17 பள்ளிகளில் 62.40 லட்சம் ரூபாய்; நான்காவது மண்டலத்தில் 66 லட்சம் ரூபாய் செலவில் தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
                               நான்கு மண்டலத்திலும் சேர்த்து, மொத்தம் 72 பள்ளிகளுக்கு, 2.58 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தொகையை கல்வி நிதியிலிருந்து செலவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment