பள்ளியில் முறையாக கல்வி கற்காமல் நேரடியாக 8ம் வகுப்பு எழுதுவோருக்கு "இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம்" பொருந்தாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஓட்டுனர் உரிமம் வேண்டுபவர்கள், ரயில்வே துறையில், அலுவலகங்களில் உதவியாளர் வேலைக்கு செல்பவர்கள் என அனைவருக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது
அவசியமாக கருதப்படுகிறது. இத் தேர்வெழுத வயது வரம்பு இல்லாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 30 வயதிலும் இத்தேர்வை எழுதுகின்றனர்."இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம்" நேரடி தனி தேர்வுக்கு பொருந்தாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதன்படி பள்ளிகளில் முறையாக பயிலும் மாணவர்களை மட்டுமே 8ம் வகுப்பு வரை தோல்வியடைய செய்யக் கூடாது என தேர்வுத்துறை அறிவித்தது. இந்த புதிய திட்டம் கடந்த ஏப்ரலில் நடந்த, நேரடி எட்டாம் வகுப்பு தனித்தேர்வில் தேர்வுத்துறை அமல்படுத்தியுள்ளது. இந்த தேர்வில் 22.62 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment