Sunday 30 December 2012

முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் குளறுபடியால் தேர்வான ஆசிரியர்கள் தவிப்பு



                         முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தேர்வான ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குளறுபடியால் தவித்து வருகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் 2895 காலிப்பணியிடங்களுக்கு, முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான தேர்வுகள் நடந்தது. இதில் வழக்கு காரணமாக 587 பணியிடங்கள் ரிசர்வ்
செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு தேர்வு பட்டியலில் இடம் பெற்றனர். இதில் 2308 பேருக்கு தேர்வுக்கான உத்தரவு வழங்கப்பட்டது. பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவில்லை. இந் நிலையில் இந்த பட்டியலில் தகுதியற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தினரால் சரி பார்க்கப்பட்டது. இதன் பின்னர் பள்ளிக்கல்வித்துறையில் பட்டியல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
             பணி நியமன ஒதுக்கீடுக்கான கவுன்சிலிங் இன்று நடக்கவுள்ளது. கோர்ட் வழக்கில் தமிழ் வழியில் பட்டம் பயின்றவர்கள், தாவரவியல் பட்டம் படித்தவர்களுக்கு மட்டுமே பிரச்னை உள்ளது. மற்ற பாடப்பிரிவுகளில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவேண்டும்.
பல பாடப்பிரிவுகளில் முதல் பட்டியலில் வெளியான கட்-ஆப் மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. இரண்டாம் பட்டியலில் பலருக்கு மதிப்பெண் காட்டப்படாமல் தேர்வில் ஆப்சென்ட் காட்டப்பட்டுள்ளது. மதிபெண் பூஜ்யம் காட்டுகிறது. கடினமாக உழைத்து தேர்வில் தேர்வு செய்யப்பட்ட பிறகும், ஆசிரியர் தேர்வு வாரியம் அலட்சியமாக உள்ளது. பலரது வாழ்க்கை பிரச்னையை கவனத்துடன் செயல்படாமல், கண்ணா மூச்சி ஆட்டம் போல ஆடி வருவது தேர்வான ஆசிரியர்களிடையே மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பெயர் வெளியிட விரும்பாத தேர்வான ஆசிரியர் ஒருவர் கூறுகையில், தமிழாசிரியர்கள் காலிப்பணியிடம் 601. இதில் முதல் பட்டியலில் நான் தேர்வு பெற்றுள்ளேன். இரண்டாம் பட்டியலில் 538 பேர் மட்டுமே தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்துள்ளது.
          மீதமுள்ள 63 பேரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை அணுகிய போது தேர்வு பட்டியல் ஆன் லைனில் வெளியிடப்படும் அதுவரை காத்திருங்கள், என்கின்றனர். நிறுத்தம் செய்திருப்பதற்கான காரணங்களை தெரிவிக்க மறுக்கின்றனர். இது போன்ற குழப்பம் இல்லாமல் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வரவேண்டும், என்றார்
.

No comments:

Post a Comment