Wednesday 26 December 2012

3ம் பருவ பாடப்புத்தகங்கள் விடுமுறைக்கு பின் வழங்கப்படும்



             ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தபின், மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, மூன்று பருவமாக பிரிக்கப்பட்டு,
கல்வி கற்பிக்கப்படுகிறது. இரண்டாம் பருவத் தேர்வு, தற்போது நடந்து வருகிறது. மூன்றாம் பருவம், ஜனவரி மாதம் துவங்குகிறது. அதற்குரிய பாடப்புத்தகம், அந்தந்த மாவட்டத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்படுகிறது.
                         
நாமக்கல் மாவட்டத்தில், ஆறாம் முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்வதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டது. "அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தபின், பள்ளித் துவங்கியதும், அந்தந்த பள்ளிக்கு தேவையான புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டு, மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்படும்" என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
.

No comments:

Post a Comment