பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவர்களுக்காக ஆட்டோ-மொபைல் துறையில் சான்றிதழ் படிப்புகள் ஜனவரி மாதத்தில் தொடங்க உள்ளன. யுனிவர்சல் சேவக் யுனிவர்சிடி டிரஸ்ட் என்ற அமைப்பு, இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பு ஆகியவற்றுடன்
இணைந்து இந்தப் படிப்புகளை நடத்துகிறது. ஆட்டோமொபைல் அடிப்படை செயல்பாடு மற்றும் பராமரிப்பு, ஆட்டோமொபைல் எலெக்ட்ரிக்கல் வொர்க்ஸ், ஆட்டொமொபைல் பழுது பார்ப்புப் பணிகள், ஆட்டொமொபைல் பெயின்டிங் ஆகிய 4 துறைகளில் 6 மாத கால சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்போடு
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, முதலுதவி சிகிச்சை, கழிவு மேலாண்மை, போக்குவரத்து விதிகள், தீயணைப்பு முறைகள், தோட்டம் அமைத்தல் போன்றவற்றில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. திறமையான மாணவர்களுக்கு கார் விற்பனை பயிற்சியும் வழங்கப்படுவதாக திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.பி.வி. செழியன் தெரிவித்துள்ளார். இந்த மையத்தில் 4-வது பேட்ச் படிப்பு ஜனவரி 13 முதல் ஜூன் 13 வரை நடத்தப்படுகிறது. இப்போது இந்தப் படிப்புகளில் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மாணவர்களுக்கு ஆட்டோமொபைல் பயிற்சிகளை வழங்கி சர்வதேச கார் பழுதுபார்ப்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் உறுதிசெய்து தரப்படுகிறது. ஏற்கெனவே மூன்று பேட்ச் மாணவர்கள் இந்தப் படிப்புகளை முடித்து நல்ல வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் திட்ட் ஒருங்கிணைப்பாளர் செழியன் தெரிவித்துள்ளார். இந்த மையத்தின் முகவரி: 485, ஆற்காடு சாலை, சாலிகிராமம் (விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் பின்புறம்), டி.எஸ்.சி. ஹுண்டாய் வளாகம் அருகில், சென்னை-93. விவரங்களுக்கு 9940087025, 9094761346,
9840601672 எண்களில் தொடர்புகொள்ளலாம்.
No comments:
Post a Comment