உயர்கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்குவது தொடர்பான புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படாத நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடிந்து விட்டது. நிறைவேற்றப்படாத
மசோதாக்களில், "உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய அங்கீகார ஒழுங்காற்று ஆணைய மசோதா (2010)' வும் ஒன்று.கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி திட்டங்கள் அனைத்தும் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. இத்தகைய அங்கீகாரம் வழங்குவதற்காக புதிய அமைப்பு நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறுவது தாமதமாகி வரும் நிலையில், இதுதொடர்பான புதிய விதிமுறைகள் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜு நேற்றுவெள்ளிக்கிழமை தெரிவித்தார். பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) மற்றும் ஏஐசிடிஇ ஆகியவை இணைந்து இந்த விதிமுறைகளை வகுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment