Monday 7 January 2013

பணி நியமனம், பதவி உயர்வு: இரட்டை பட்டப்படிப்புக்கு தடை



                               தமிழகத்தில், அரசு பள்ளிகளில் நேரடி நியமனம், பதவி உயர்வுக்கு இரட்டை பட்டப்படிப்பு செல்லாது என, சி...,க்களுக்கு, கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு
பள்ளிகளில் ஆசிரியர் பணியில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் ஒரே ஆண்டில் இரட்டை பட்டப்படிப்பு பெற்றிருந்தால், அந்த தகுதி அடிப்படையில், நேரடி நியமனம் செய்ய தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
                                 இதுகுறித்து, சி...,க்களுக்கு கல்வித்துறை விடுத்துள்ள உத்தரவில், தொடக்க கல்வித்துறையில் பல்வேறு தொகுப்பு வழக்குகள் தொடர்பாக, சென்னை ஐகோர்ட் 2012 ஆகஸ்ட் 14ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், அனைத்து பல்கலை.,களில் ஏற்கனவே பட்டம் பெற்ற ஒருவர், இரட்டை பட்டப்படிப்பு மூலம் ஓராண்டில் (2 பட்டபடிப்பு) பெறும் பட்டத்தை 3 ஆண்டு பட்ட படிப்பிற்கு இணையாக கருத முடியாது. எனவே, பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இத்தகுதிகளை ஏற்க கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment