Wednesday 2 January 2013

பள்ளி மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் ஊக்கத்தொகை



                     காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில், அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், சிறப்பு ஊக்கத்தொகை பெற, வங்கியில் கணக்கு துவக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் சித்ரசேனன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளிகள் மற்றும்
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 2011-12ம் கல்வியாண்டில் படித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அரசு உத்தரவுப்படி, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
                              பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 1,500 ரூபாய், பிளஸ் 2 மாணவர்களுக்கு, 2,000 ரூபாய் வழங்கப்படும். இதைப் பெற மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிக்கு அருகில் உள்ள, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், உடனடியாக சேமிப்பு கணக்கு துவக்க வேண்டும். அதன்பிறகு வங்கி கணக்கு எண், .எப்.எஸ்., கோடு எண், வங்கி பெயர், ஆகிய விவரங்களை, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும். வங்கி கணக்கில் சிறப்பு ஊக்கத்தொகை செலுத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment