Wednesday 9 January 2013

அண்ணா பல்கலை நடவடிக்கை



                 பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாட்டின் பல்கலைகளுக்கு யு.ஜி.சி. உத்தரவிட்டதையடுத்து, அண்ணா பல்கலை அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.  தனக்கு கீழ் செயல்படும் மொத்தம் 550 உறுப்பு கல்லூரிகள் மற்றும்
இணைப்புக் கல்லூரிகளில், பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் புகார்களை விசாரிக்கவும், தங்களைக் காத்துக்கொள்வதற்கான விழிப்புணர்வை அவர்களுக்கு வழங்குவதற்குமான மகளிர் உரிமைக் குழு(women empowerment committee) அமைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், இப்பல்கலையின் affiliation விண்ணப்பத்தில், விண்ணப்பிக்கும் கல்லூரியில் மேற்கூறிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டியானது ராகிங் தடுப்புக் கமிட்டியின் அம்சங்களை ஒத்திருக்கும்.

No comments:

Post a Comment