Wednesday 9 January 2013

ஐஐஎம்.,களும் கட்டணத்தை உயர்த்துகின்றன!



                   சமீபத்தில், ஐஐடி.,கள் கட்டணத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, ஐஐஎம்.,களும் கட்டணத்தை உயர்த்தவுள்ளன. 2012 கேட் தேர்வில் அதிக மதிப்பெண்களை வைத்திருந்து, ஐஐஎம்-அகமதாபாத்தில் சேர காத்திருப்பவர்கள், தங்களின் நிதியிருப்பை அதிகப்படுத்திக்
கொள்ளவும். கடந்தமுறை இங்கே ரூ.16.6 லட்சமாக இருந்த கட்டணம், இந்த கல்வியாண்டு முதல் உயர்கிறது. ஆனால், மொத்த சேர்க்கை கொள்ளளவு இடங்கள் கடந்தாண்டைப் போலவே, 385 என்ற அளவிலேயே உள்ளது. மேலும், அகமதாபாத் ஐஐஎம்.,மில் 2012-2014ம் கல்வியாண்டில் போஸ்ட்கிராஜுவேட் ப்ரோகிராம்(PGP) படிப்பவர்கள், வரும் கல்வியாண்டு முதல் கட்டண உயர்வை எதிர்கொள்வார்கள்.
                               ஐஐம்-அகமதாபாத்தை அடுத்து, ஐஐஎம்-ராய்ப்பூரிலும் கட்டணம் அதிகரிக்கிறது. ஆனால், உயர்வு விகிதம் அகமதாபத்தைவிட குறைவுதான். அதேசமயம், ஐஐஎம்-கல்கத்தா மற்றும் ஐஐஎம்-கோழிக்கோடு ஆகியவை கட்டண உயர்வைப் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. அவை, 2012-14 கல்வியாண்டுகளுக்கு ரூ.10 லட்சம் வசூலிக்கின்றன. கட்டண உயர்வைப் பற்றி ஐஐஎம்-பெங்களூர் அடுத்தவாரம் முடிவு செய்கிறது. ஐஐஎம்-காசிப்பூர், ஐஐஎம்-லக்னோ மற்றும் ஐஐஎம்-ரோடாக் போன்றவை, கடந்தாண்டு கட்டணத்துடனேயே தொடர்கின்றன.

No comments:

Post a Comment