நாடுமுழுவதும் நகரமோ, கிராமமோ தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் மோகம் அதிகரித்து வருவதாக சமீபத்திய சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. 46 சதவிகித மாணவர்கள் கணித்தப்பாடத்தில் திணறுவதாகவும் தெரிவிக்கிறது அந்த சர்வே. பிராத்தம் என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆரம்பக்கல்வி பற்றி ஆய்வு நடத்தியது. அதில்
பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. ஆங்கில மோகம் காரணமாக அதிகம் பணம் செலவழித்து ஆங்கிலப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோரின் போக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. நகரம் மட்டுமல்ல கிராமப்புறங்களையும் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. டிஜிட்டல் போர்டு, ஆய்வு கூட வசதி, தனித்தனி கம்ப்யூட்டர், கழிவறை, குடிநீர் மற்றும் மதிய உணவு வசதி என இந்த தனியார் பள்ளிகள் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உள்ளன. ஆனாலும் அவற்றின் கல்வித்தரம் தான் கேள்விக்குறியாக உள்ளது.
No comments:
Post a Comment