மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தாக்கல் செய்த நிதியறிக்கையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கு, வரும் நிதியாண்டில், 6,275 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்வெளித் துறைக்கு, 5,615 கோடியும், அணுசக்தித் துறைக்கு, 5,880 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழை மற்றும் சாதாரண மக்களின்
மேம்பாட்டிற்கான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு, 2,000 கோடியில் தனி நிதியம் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலை மேம்பாடுக்கு ரூ.100 கோடி: அலிகார் முஸ்லிம் பல்கலை, பனாரஸ் இந்து பல்கலை, சமூக அறிவியலுக்கான டாடா கல்வி நிறுவனம், கலை மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்திற்கான தேசிய அறக்கட்டளை ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக, தலா, 100 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment