Friday, 1 March 2013

பள்ளிகளுக்கு மதியம் 2 மணி வரை தடையில்லா மின்சாரம்



               பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின்போது மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மின் வெட்டு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நேற்று
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் அமலில் உள்ள அறிவிக்கப்பட்ட மின் வெட்டால், தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பொதுத் தேர்வுகள் முடியும்வரை பள்ளிகளுக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
                         
சென்னையில்... சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் 2 மணி நேர மின் வெட்டு, மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையுள்ள நேரங்களில் செய்யப்படும். தேர்வு மையங்கள் இல்லாத பிற பகுதிகளில் இரண்டு மணி நேர மின் வெட்டு காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செய்யப்படும்.
                                  
எந்தெந்த நாள்களில்... மின் வாரியம் அறிவித்துள்ள இந்த மின் வெட்டு நேர மாற்றம் மார்ச் 1, 4, 6, 7, 11, 14, 15, 18, 21, 25, 27, 28 மற்றும் ஏப்ரல் 1, 2, 5, 8, 12 ஆகிய தேதிகளுக்கு மட்டுமே பொருந்தும்
.

No comments:

Post a Comment