Friday, 1 March 2013

கூட்டுறவு சங்க தேர்தல்தேர்தல் அதிகாரிகள் நியமனம்



                                      தமிழகத்தில் நடைபெற உள்ள கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் அதிகாரிகளாக, அந்தந்த மாவட்டங்களின் துணை பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த
சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர் சேர்க்கை, படிவங்கள் சரிபார்ப்பு போன்றவை நடந்தன.
                                    புகார்: புதிய உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் இருந்து தங்களுக்கு வினியோகிக்கப்படவில்லை என்று பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அதேப்போல் கூட்டுறவு சங்க தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டுமென்றும் அக்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

No comments:

Post a Comment