Friday, 1 March 2013

விண்ணை முட்டும் சாதனை



            இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் 2013 பிப்ரவரி 25 பொன்எழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய நாள். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் அமைந்துள்ள சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல். வி.சி.-20 ராக்கெட் ஏழு செயற்கைக் கோள் களுடன்
விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது. அந்த நாள் இந்தியர்களுக்கு பெருமைக்குரிய நாளாக அமைந்தது. 1993 செப்டம்பர் 20ம் நாள் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் .ஆர்.எஸ்.-1 விண் ணில் ஏவப்பட்டது; ஆனால் அது வெற்றிபெற வில்லை. அதற்குப்பின் தொடர்ந்து வெற்றி முகமே. இப்போதைய வெற்றி 22வது தொடர் வெற்றியாகும். அதிலும் குறிப்பாக ஏழு செயற் கைக்கோள்களை ஏவி அனைத்தையும் 20 நிமிடங்களில் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியிருப்பது இந்திய விண்வெளி வரலாற்றின் பக்கங்களில் சிறப்பிடம் பெறுவ தாகும்.
                                  
அந்த ஏழு செயற்கைக் கோள்களில்சரள்ஒன்றுதான் இந்திய செயற்கைக்கோள். மற்றவை கனடா (2), ஆஸ்திரியா(2), டென்மார்க் (1), பிரிட் டன்(1) ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்கள். இந்திய செயற்கைக்கோள் பூமி, கடல், ஆகாயம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையி லான தகவல்களை அனுப்பும் திறன் படைத்தது. இது பருவநிலை மாற்றம், கடல் மட்டம் உயர்வது, விலங்குகள் இடம்பெயர்தல், பறவை கள், கடல் சீல்கள் குறித்த தகவல்களை பூமிக் குத் தரும். அதோடு கடலில் வழிகாட்டியாகவும் எச்சரிக்கைக் கருவியாகவும் பயன்படும் மித வைகள் மற்றும் படகுகளை அடையாளம் காண உதவும். எனவே இந்தியச் சுற்றுச்சூழல் மேம் பாட்டுக்கும் கடல்வள ஆய்வுகள், மீனவர்கள், கப்பல்களுக்கு வழிகாட்டுதல் என பன்முகத் தன்மையுடன் உதவும் வகையில் இந்த செயற் கைக்கோளின் செயல்பாடு அமைந்திருக்கும் என்பது இந்திய அறிவியல் முன்னேற்றத்தின் மேம்பாட்டுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிப்ப தாக அமைந்திடும்.
                                        
விண்வெளி ஆய்வுகளில் தற்சார்பு பெறு வதும் மேம்பாடு அடைவதும் ஒரு நாட்டின் முன் னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமை யாததாகும். இத்தகைய நிலைக்கு இந்தியா உயர்ந்திருப்பதற்கு ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்ளவேண்டும். நமது முன்னேற் றத்தோடு மற்ற நாடுகளையும் அத்தகைய நிலைக்கு உயர்த்துவதற்கு நாம் உதவுவது பாராட் டுக்குரியதாகும். அந்தப் பண்பு நமக்கு சோவியத் நாடு வழங்கிய நன்கொடை எனலாம். இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கும் இந் திய விஞ்ஞானிகளை குடியரசுத் தலைவர் பிர ணாப் முகர்ஜி பாராட்டியுள்ளார். இந்திய மக்கள் அனைவரும் அவர்களைப் போற்றுதல் கடமை யாகும். அவர்கள் மென்மேலும் சாதனைகள் நிகழ்த்தட்டும். நாடு நலம் பெறட்டும். மக்கள் வாழ்வு வளம் பெறட்டும்.
                                   
ஆனால் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விண்வெளி சார்ந்த டெலி - மருத்துவம், டெலி- கல்வி போன்ற திட் டங்கள் இதற்கு சிறந்த உதாரணங்கள் என்றும் பிரணாப் கூறியுள்ளார். ஆனால் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதல் நிதி ஒதுக்கி சிறப்புத் திட்டங் களைச் செயல்படுத்துவது மிக அவசியம் என் பதை அவர் நினைவில் கொள்ளட்டும்
.

No comments:

Post a Comment