Wednesday, 13 March 2013

ராணுவ கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை: மாவட்ட ஆட்சியர் தகவல்



             இந்திய ராணுவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க விரும்புகின்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்திரகாண்ட் மாவட்டத்தில் உள்ள ராஷ்ட்டிரிய இந்தியன்
ராணுவக் கல்லூரியில், பதினொன்றரை வயது முதல் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப படிவத்தை பெற பொதுப்பிரிவினர், 400 ரூபாயையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினர், 355 ரூபாயையும் அனுப்பி, பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 31.3.2013 தேதிக்குள் வந்து சேரவேண்டும். மேலும் விவரங்களுக்கு, தாம்பரத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment