வேலை வாய்ப்பு அலுவலகங்களில், நிர்வாக காரணங்களுக்காக சான்றிதழ்கள் பதிவு செய்யும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக உள்ளதால், பதிவு, புதிப்பித்தல், முகவரி மாற்றம் மற்றும் விசாரணை
குறித்த அனைத்து அலுவல்களும், பகல் 3 மணிக்குள் முடிக்கப்படும். அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், இந்த நேரத்தை கடை பிடிக்குமாறு, சென்னை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. எனவே பதிவு செய்ய வருவோர், பகல் 3 மணிக்கு முன்னரே வந்து விட வேண்டும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில் பணிச்சுமை, நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment