Tuesday 30 April 2013

"இரட்டைப் பட்டம்" வழக்கு ஜூன் 10-க்கு ஒத்திவைப்பு, ஆசிரியர் பொது மாறுதல் ஜூன் 10-க்குள் நடத்த வாய்ப்புகள் குறைவு!



                  ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரட்டை பட்டம் மற்றும் மூன்றாண்டு பட்டம் முடித்தோர் அகிய இரு தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட்டது. நீதிபதிகள் அரசின்
நிலை குறித்து அரசு வழக்கறிஞரிடம் கேட்கையில், அரசிடம் ஆலோசித்துவிட்டு பதிலளிப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து. இரு தரப்பு இறுதி விசாரணை ஜுன் 10க்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர் அதுவரை  இடைக்கால தடை மற்றும் விசாரணை நீடிப்பதால், பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என நீதிபதிகள் அரசு தரப்பிற்கு தெரிவித்ததாக இவ்வழக்கை தொடுத்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கு இந்நிலையில் இருப்பது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை மே மாதத்திற்குள் முடித்திட முடியாத நிலையை உருவாக்கிவிடுமோ என ஆசிரியர்கள் கவலை கொள்கின்றனர். இதனால் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 10-க்குள் நடக்க வாய்ப்புகள் குறைவு என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment