2013-14ம் கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்காக, 9.67 லட்சம், ஜியாமெட்ரி பெட்டிகளை கொள்முதல் செய்ய, பள்ளி
கல்வித் துறை, டெண்டர் வெளியிட்டுள்ளது. இலவச கணித உபகரண பெட்டி வழங்கும் திட்டம், கடந்த கல்வி ஆண்டில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், 1 முதல் பிளஸ் 2 வரை, புத்தகப் பை; 1 முதல் 5ம் வகுப்பு வரை, கலர் பென்சில்கள்; 6 முதல் 10ம் வகுப்பு வரை, அட்லஸ் வழங்குவது ஆகிய திட்டங்களும், புதிதாக அறிவிக்கப்பட்டன.இந்த நான்கு திட்டங்களுக்காக, கடந்த நிதி ஆண்டில், 136 கோடி ரூபாயை, தமிழக அரசு செலவழித்தது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், மேற்கண்ட இலவச திட்டங்களை செயல்படுத்த, 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை, பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது. டெண்டர் விண்ணப்பங்கள், நேற்று முதல், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. "மே, 23ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும்; பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள், மே, 24ம் தேதி, பிற்பகல், 2:00 மணி வரை பெறப்படும்&' என, இயக்குனரகம் அறிவித்துள்ளது. இந்த ஒரு திட்டத்திற்கு மட்டும், 3.50 கோடி ரூபாய் செலவழிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment