தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், கோடை கால பயிற்சி முகாம் துவங்குகிறது. மாணவர்களிடையே, அறிவியல் ஆர்வத்தை வளர்க்க, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பயிற்சிகளை
நடத்துகிறது. இந்தாண்டு கோடை முகாமில் எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி, வரும் 9ம் தேதி, துவங்குகிறது. கோடை கால பயிற்சி வரும், 14ம் தேதி துவங்கி, 16ம் தேதி வரை நடக்கிறது. இதில், அடிப்படை அறிவியல், உயிர் அறிவியல், நானோ தொழில்நுட்பம், பல்நோக்கு தொழில்நுட்பம் குறித்து வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. வானவியல் முகாம், மே, 20ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடக்க உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மேல்படிப்பில் எந்த துறையை தேர்வு செய்யலாம் என, துறை வல்லுனர்கள் வழிகாட்டும் நிகழ்ச்சி, வரும், 17ம் தேதி நடக்க உள்ளது.இதில், மருத்துவம், பொறியியல், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், ராணுவம் உள்ளிட்ட துறை வல்லுனர்கள் வழிகாட்டுவர். தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர், அய்யம் பெருமாள் கூறுகையில், "கோடை கால பயிற்சி முகாமில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு மாணவர்களும், "பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்த என்ன படிக்கலாம்" என்ற நிகழ்ச்சியில், பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களும் கலந்து கொள்ளலாம்" என்றார்.
No comments:
Post a Comment