Thursday, 25 April 2013

உங்கள் எண்ணங்களை ஒளி ஓவியமாக்கும் புகைப்படத் துறை



             போட்டோகிராபி எனப்படும் புகைப்படக்கலை, ஒளியை படமாக பதிவு செய்து புகைப்படங்களை உருவாக்கும் கலை. படங்கள் என்பவை, சக்தி வாய்ந்த ஊடகம். அனைத்து இடங்களிலும், புகைப்படத்தின் பயன்
உள்ளது. வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும், நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியை, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான். அவை சிரிப்பு மூட்டுகின்றன; அதிர்ச்சிஅளிக்கின்றன; வியப்பில் ஆழ்த்துகின்றன. இதை சரியான விதத்தில் வழங்கினால் அழகாகவும், படைப்புத் திறனை வெளிப்படுத்தக் கூடியதாகவும் அமையும்.
                           
இது ஒரு படைப்பு உணர்வு சார்ந்த வெளிப்பாடாக இருப்பதால், புகைப்படம் எடுப்பதில் வெற்றி பெறுவதற்கு, முறையான பயிற்சியை விட, இயல்பான திறமை அதிகம் தேவை. உங்கல்நல்ல கருத்தை தேர்ந்தெடுப்பது, அதை தாக்கம் ஏற்படுத்தும் வகையில் படமாக்குவது, அதற்கு பொருத்தமான உபகரணங்களை பயன்படுத்துவது ஆகியவற்றை தெரிந்து வைத்திருந்தால் தான், இத்துறையில் சிறப்பாக வர முடியும். புகைப்படம் எடுத்தல் என்பது, தனித்துவம் மிக்க படைப்புணர்வு கொண்ட சுயவெளிப்பாடு. இதில் அழகியல் உணர்வு, தொழில்நுட்பத் திறமை அவசியம். இதை பொழுதுபோக்காகவும், லாபம் தரக்கூடிய தொழிலாகவும் மாற்றுவது, அவரவர் திறமையை பொறுத்தது. தகவல் பரிமாற்ற வலைப்பின்னலின் வளர்ச்சி, பேஷன் துறையின் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக புகைப்படம் நமது வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டன. எனவே இத்துறை, ஆர்வம், திறமை உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்பு, முன்னேற்றத்தை உருவாக்கக் கூடியது.
வழங்கும் படிப்புகள்
1.
பி..,(போட்டோகிராபி)  3 ஆண்டு
2.
எம்.., (போட்டோகிராபி) 2 ஆண்டு
3.
டிப்ளமா (போட்டோகிராபி)  3 ஆண்டு
கல்வித் தகுதி
                 
இத்துறையில் நுழைவுதற்கு பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றிருத்தல் போதும்.
கல்வி நிறுவனங்கள்
                    
போட்டோகிராபி துறையில், இளநிலை முதுநிலை பிரிவுகள், இந்தியா, வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் வழங்குகின்றன.

வேலைவாய்ப்பு
                        
புகைப்படத்துறையில் பட்டம், டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள், மூத்த புகைப்படக் கலைஞரிடம் உதவியாளராக சேரலாம். அல்லது, கமர்சியல், இன்டஸ்ட்ரியல், அட்வர்டைசிங், பைன் ஆர்ட்ஸ், சயின்ட்டிபிக், நியூஸ், சினிமா ஸ்டில்ஸ், டி.வி., சேனல்ஸ், பேஷன், ஒயில்ட் லைப் போன்ற பல பிரிவுகளில் போட்டோகிராபர் வேலைவாய்ப்பை பெறலாம்
.

No comments:

Post a Comment