நெல்லை மாவட்டத்தி ல் 547 பணி நிரவல் பணியிடங்கள் உள்ளதால் பல்வேறு தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நெல்லை மாவட்ட அனைத்து
வட்டார, பொறுப்பாளர்கள் கூட்டம் நெல்லையில் நடந்தது. மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் தர்மராஜ் பிராங்களின் வரவேற்றார். முன்னாள் பொருளாளர் சிவஞானம், மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர்.நெல்லை மாவட்டத்தில் 547 பணியிடங்கள் பணி நிரவல் பணியிடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் அதிகமான ஆசிரியர்களுக்கு பணி நிரவல் ஏற்படும் அபாயம் உள்ளதால் பல பள்ளிகள் மூடப்பட வேண்டிய ‹ழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை தடுக்கும் வகையில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற ஆணையை முதல்வர் பிறப்பிக்க வேண்டும்.சிறுபான்மை பள்ளிகளில் நியமனம் மற்றும் பணி மாறுதல் மூலம் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் பணியிடங்களை அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 8 சதவீத அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். கடந்த 2006 முதல் கால முறை ஊதியம் பெற்று அனைத்து வகை பள்ளிகளிலும் பணிபுரிந்து வரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவலங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 6வது ஊதிய குழு முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் நன்றி கூறினார். இதில் மாவட்ட துணைத் தலைவர் ஜான் துரைசாமி, நிர்வாகிகள் மோதிலால்ராஜ், கிறிஸ்டோபர், பாபு, ரமேஷ் ராஜன், செல்வின், கருணாகரன், ஜோசப் ராஜசிங், நவமணி செல்லப்பாண்டியன், பால் வண்ணன், ஜோசப், தங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment