Saturday, 27 April 2013

பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்க மொபைல் கவுன்சிலிங் வழங்க 10 வேன்கள் வாங்கப்பட்டுள்ளது.



            தற்போதைய கல்வி கற்கும் சூழல் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை தரக்கூடியதாக அமைந்துள்ளது. மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். அதனால் மாணவர்களின் மன
அழுத்தத்தை நீக்கி ஆரோக்கியமாக கல்வி கற்க வழிவகுக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகள் வழங்க 10 மொபைல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இந்த நடமாடும் ஆலோசனை நிலையங்கள் செல்லும். எந்ததெந்த பள்ளிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என்பதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக தெரிவித்தால் அந்த பள்ளிகளுக்கு மொபைல் கவுன்சிலிங் குழு சென்று ஆலோசனை வழங்கும். இதற்காக 10 வேன்கள் வாங்கப்பட்டுள்ளன.

            இந்த கவுன்சிலிங் மையங்களுக்கு ஒரு உளவியல் ஆலோசகர் வீதம் 10 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. வருடத்திற்கு 10 மாதங்களுக்கு மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்ட தொகையாக மாதந்தோறும் வழங்கப்படும். இந்த பணி இடங்களுக்காக கல்வித்தகுதி, வயது, அனுபவம் போன்ற விவரங்கள் மற்றும் விண்ணப்படிவம் பள்ளிக்கல்வி இயக்கத்தின் www.dse.tn.gov.in இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள பணியாளர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து ஜாய் எபினேசர் கெட்சி, உதவி இயக்குனர், சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி இயக்கம், சென்னை-6 என்ற பெயரிடப்பட்ட முகவரிக்கு பதிவு அஞ்சலில் மே 10-ந் தேதிக்குள் அனுப்பி வைத்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்
.

No comments:

Post a Comment