"புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும்,'' என, அகில இந்திய மாநில அரசு பணியாளர் மகா சம்மேளன தலைவர் கு. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் அவர்
கூறியதாவது: தமிழகத்தில் 2006ம் ஆண்டு முதல், அரசு பணியாளர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள குறைபாடுகளை களைய அமைக்கப்பட்ட மூவர் குழுவின் அறிக்கையை பெற்று, அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அறிக்கையை அமல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்த சட்டசபை தேர்தலின்போது முதலில் அறிவித்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஓய்வு பெறும்போது, அவர்கள்வாங்கும் சம்பளத்தில் சரிபாதி தொகையை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். பதவிஉயர்வு பெற்றபின், பென்ஷன் பெற முடியாத அங்கன்வாடி பணியாளர்களுக்கு, உடனடியாக பென்ஷன் வழங்க வேண்டும். மத்திய அரசு உயர்த்தி வழங்கியது போலதமிழக அரசும், அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், இந்த அகவிலைப்படி அடிப்படையில், ஊதியம் வழங்க வேண்டும். மேலும், நாடு முழுவதும்உள்ள ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment