Saturday, 27 April 2013

கணினி ஆசிரியர் பணிக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிக்கை


அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில்முன்னுரிமை அளிக்க வேண்டும் என பகுதிநேர கணினி ஆசிரியர்கள்கோரிக்கை  விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள்
சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.பெரியசாமிசேலத்தில்செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கணினிஓவியம்தையல்இசை,உடல்கல்வி ஆகிய சிறப்பு பாடங்களை மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்கு 16,549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக கடந்த 2012-ஆம்  ஆண்டு நியமிக்கப்பட்டனர்.உயர் கல்வித் தகுதிபணி மூப்பு ஆகியவை அடிப்படையில் இந்தப்பகுதிநேர ஆசிரியர் பணி எங்களுக்கு வழங்கப்பட்டதுஎங்களுக்குமாதம்தோறும்ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.இதில்சுமார் 5,400 பேர்  பகுதி நேர கணினி ஆசிரியர்கள். தற்போதுஅரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி கட்டாயப்  பாடமாக்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காகதமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.அதன்படிகணினி ஆசிரியர் பணிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்இதில்அரசுப் பள்ளிகளில் கடந்த ஓராண்டாகபணியாற்றி வரும் எங்களுக்குமுன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் அவர். பேட்டியின் போதுஅந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலர் பி.ராமர்,மாவட்டப் பொருளாளர் .முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment