ஆங்கிலத்தில் உள்ள எளிய வார்த்தைகளைத் தமிழக ஊரக மாணவர்களில் 57.1 சதவிகிதத்தினரால் நன்றாக வாசிக்க முடிகிறது. இது, இந்திய அளவில் 48.9 சதவிகிதம்தான் என்பதால், அடிப்படை ஆங்கிலத்தை
அறிந்துவைத்து இருப்பதில் தமிழகச் சுட்டிகள் முன்னேற்ற நிலையில் உள்ளனர்.
வகுப்பு ஆசிரியர்-மாணவர்கள் விகித விதிகளைக் கடைப்பிடிப்பதில் ஏற்றம் காணப்படுகிறது. கடந்த 2010-ல் 47 சதவிகிதப் பள்ளிகளில் இந்த விதிகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டன. இப்போது, இது 49.3 சதவிகிதமாக உயர்ந்து உள்ளது. 81.7 சதவிகிதப் பள்ளிகளில் ஆசிரியர்- வகுப்பறை விகிதம் விதிமுறைக்கு உட்பட்டு உள்ளது.அசர் ஆய்வுக்காக மொத்தம் 630 பள்ளிகள் பார்வையிடப்பட்டன. அவற்றில் 80.8 சதவிகிதப் பள்ளிகளில் குடிநீர் வசதி உள்ளது. 12 சதவிகிதப் பள்ளிகளில் குடிநீர் வசதிகள் முற்றிலும் இல்லை. கழிவறை வசதி இல்லாத பள்ளிகளின் விகிதம், 2011-ல் 9.6 சதவிகிதமாக இருந்தது. இது 5.2 சதவிகிதமாகக் குறைந்து இருக்கிறது. மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் உள்ள கழிவறைகள் உள்ள பள்ளிகளின் விகிதம், கடந்த இரண்டு ஆண்டுகளில் 44.6 சதவிகிதத்தில் இருந்து 68.9 சதவிகிதமாக உயர்ந்து உள்ளது. 66.1% பள்ளிகளில் முழுமையான சுற்றுச் சுவர் உள்ளது. தமிழகத்தில் 99.8 சதவிகிதப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் முழுமையாகச் செயல்பசெயல்படுகிறது.
No comments:
Post a Comment