"தீபாவளிக்கு முதல் நாளான, நவம்பர், 1ம் தேதி, அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளிக்க, நாமக்கல் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 15 யூனியன்களில், 812
துவக்கப்பள்ளி, 209 நடுநிலைப்பள்ளி என, மொத்தம், 1,021 அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. அவற்றில், 53 ஆயிரத்து, 536 மாணவர், 52 ஆயிரத்து, 169 மாணவியர் என, மொத்தம், ஒரு லட்சத்து, 5,705 பேர் படிக்கின்றனர். மேலும், 3,361 அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வரும் நவம்பர், 2ம் தேதி தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதற்காக, பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, புத்தாடை எடுப்பது, இனிப்பு வகைகள் தயாரிப்பது, ஸ்வாமி தரிசனம் செய்வதற்கு கோவிலுக்குச் செல்வது என, தீபாவளி பண்டிகைக்கு முன், ஆயத்தப்பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துக்கு தேவையான பொருட்கள் வாங்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். இந்நிலையில், நவம்பர், 1ம் தேதி பள்ளி வேலை நாளாக இருப்பதால், தீபாவளி ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள போதிய நேரம் இல்லை. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர், தீபாவளி ஆயத்தப்பணியை மேற்கொள்வதற்கு வசதியாக, நவம்பர், 1ம் தேதி உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து யூனியன் பள்ளி தலைமையாசிரியர்கள், நவம்பர், 1ம் தேதி உள்ளூர் விடுமுறை விடவேண்டும் என, அந்தந்த ஏ.இ.இ.ஓ.,விடம் கோரிக்கை விண்ணப்பம் அளித்துள்ளனர். அனைத்து பள்ளிகளுக்கும், உள்ளூர் விடுமுறை விடுவதற்கான அதிகாரம், ஏ.இ.இ.ஓ.,வுக்கு இல்லை என்பதால், தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும், பாதி பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விட்டு, மீதி பள்ளிகள் செயல்பட்டாலும், மாணவர்கள் வருகை மிக மிக குறைவாகவே இருக்கும்.
எனவே, பல்வேறு தரப்பினரின் சிரமத்தை கருத்தில் கொண்டு, நவம்பர், 1ம் தேதி, நாமக்கல் மாவட்ட கலெக்டர், உள்ளூர் விடுமுறை அளிக்க, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக ஆசிரியர் கூட்டணியின், எருமப்பட்டி ஒன்றியச் செயலாளர் ராமராசு கூறியதாவது: அரசு அறிவித்துள்ள பள்ளி வேலை நாட்களுக்கும் அதிகமாகவே, தற்போது வரை, மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டுள்ளன. அதனால், பள்ளி வேலை நாள் கணக்கில் எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும், வெளியூரில் இருந்து இம்மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர், மாணவர்கள் முன்கூட்டியே அவரவர் சொந்த ஊருக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்படாது. ஆசிரியர் மற்றும் மாணவர்கள், தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில், நவம்பர், 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment