Monday 28 October 2013

தனித்தேர்வர்களின் தேர்வு முடிவு: இணையதளத்தில் வெளியிட தடை


           தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவை இணையதளத்தில் வெளியிட தடை செய்வதென பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு தோல்வியுற்ற பாடங்களை எழுதுவதற்கு
வாய்ப்பளிக்கப்படுகிறது. இத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடக்கிறது. தனித் தேர்வர்கள் என அழைக்கப்படும் இவர்களுக்கான தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்ட பின் அந்தந்த தேர்வு மையத்தில் மதிப்பெண் சான்றுகளை பெறலாம். இணையதளத்தில் முடிவை பார்க்கும்போது மீண்டும் தேர்ச்சி வாய்ப்பை இழக்கும் சில மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. குறிப்பிட்ட நாளுக்கு பின், அவர்களது மதிப்பெண் சான்று பள்ளி தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

                      நீண்ட நாள் கழித்து தேவையெனில் மதிப்பெண் சான்றுகளை பெற முடியாமல் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் சான்று கோரும் நிலை உருவாகிறது. இவற்றை தவிர்க்க தேர்வு முடிவு விவரத்தை இணையதளத்தில் வெளியிடுவதில்லை என, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: "2013-14ம் கல்வி ஆண்டிலேயே இணையதளத்தில் தனித்தேர்வர்கள் முடிவு வெளியிடுவது நிறுத்தப்பட்டது. இம்முறை தேர்வு முடிவு வெளியான அன்றே மதிப்பெண் சான்று வழங்கப்பட்டது. இதே நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும்," என்றார்.

No comments:

Post a Comment