Sunday, 27 October 2013

கோபப்படும் மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த சிறப்புப் பயிற்சி


           எதற்கெடுத்தாலும் கோபம் வரக் கூடிய வகையில் மாணவர்கள் மாறி வருவதால் அவர்களுக்கு அந்த கோபத்தை குறைக்க வழி ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இன்றைய மாணவ,
மாணவிகளுக்கு அறிவு வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. அதே அளவிற்கு கோபமும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோபத்தினால் பல்வேறு விரும்பத்தகாத செயல்கள் நடந்து விடுகிறது. இதன் மூலம் மாணவ சமுதாயத்தின் மீது ஒருவித களங்கம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. முன்பெல்லாம் பள்ளிக்கு மாணவ, மாணவிகளை கொண்டு வந்து விடக் கூடிய பெற்றோர்கள் எங்கள் பிள்ளைகளை அடித்து சொல்லிக் கொடுங்கள் என்று கூறுவார்கள். கண்டிப்பு இருந்தால் மாணவ, மாணவிகள் மத்தியில் நல்ல கல்வியும், ஒழுக்கமும் ஏற்படும் என்பதற்காக அவர்கள் அவ்வாறு தெரிவித்தனர். ஆனால் இன்றைக்கு நிலமை தலைகீழாகி விட்டது.
                        ஆசிரியர்கள் மாணவர்களை எந்த காரணம் கொண்டும் அடிக்க கூடாது. வகுப்பறையில் பிரம்பு என்பது இருக்கவே கூடாது. மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப ஆசிரியர்கள் மாறிக் கொண்டு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் எந்த ஆசிரியரும் இன்றைக்கு மாணவர்களை கண்டிப்பதில்லை. அரசின் உத்தரவால் கண்டிப்பு இல்லை என்கிற நிலையில் பல்வேறு விரும்பதகாத செயல்கள் நடக்கும் வாய்ப்பு அதிகமாக ஏற்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இன்றைக்கு பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகமாக கோபம் வருகிறது. இந்த தகவல் அரசுக்கு சென்றதை தொடர்ந்து தற்போது சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு என்னும் தலைப்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பயிற்சியை பெறும் ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் அதனை தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும், அனைவருக்கும் கல்வி இயக்கமும் இணைந்து இந்த பயிற்சியை அனைத்து மாவட்டங்களிலும் நடத்துகிறது.
        தூத்துக்குடியில் சி.. அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த பயிற்சியினை                        அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் சி.. சரோஜா துவக்கி வைத்தார். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்த கருத்தாளர்கள் தெரிவித்த விபரம் வருமாறு: மாணவர்கள் மத்தியில் இன்றைக்கு கோபம் மிக அதிகமாக வருகிறது. அந்த கோபம் கல்லூரி முதல்வர் கொலை வரைக்கு செல்கிறது. மாணவ பருவத்திலே இதுபோன்ற கோபம் அவர்களுக்கு வருவது ஏன் என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். ஆசிரியர்கள் தான் மாணவர்கள் இதுபோன்று படக் கூடிய கோபத்தை குறைக்க அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
கம்ப்யூட்டர், டிவியில் மூழ்கலாமா?
                     இன்றைக்கு இண்டர்நெட், இமெயில், செல்போன், பேஸ்புக், சார்டிங் என்று பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. மாணவ, மாணவிகளில் பலர் கம்ப்யூட்டரில் மூழ்கி கிடக்கும் நிலை ஏற்படுகிறது. சிலர் டிவியில் மூழ்கி கிடக்கும் நிலை உருவாகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.
சமூகத்தின் பங்கு
                     சமூகம் என்றால் என்ன, அதில் நம் பங்கு என்ன என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும். பொதுவான விபரங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு தெரியும் வகையில் அதனை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஆபத்து... ஆபத்து...
               ஆம்புலன்ஸ் சேவை, 108 போன்றவற்றை தெரிந்து கொள்ள செய்ய வேண்டும். சில சேனல்களில் வரக் கூடிய ஆபத்தான விளையாட்டு போன்றவற்றை பார்த்து அதனை செய்து பார்க்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். அதுபோன்ற சேனலை பார்க்க கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும்.
பேஸ்புக்
                   தங்களது போட்டோக்களை இனம் தெரியாத நபர்களுக்கு பேஸ்புக் மூலம் அனுப்ப கூடாது. எஸ்.எம்..ஆர்.டி என்கிற சேப்டி, மீட், அஸ்பெட்டிங், ரிலையபிள், டெல் ஆகியவற்றை தெளிவாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.
சேப்டி என்கிற போது கம்ப்யூட்டரில் பல்லூடக தொடர்பில் (சேட்டிங்) 
           சொந்த தகவல்களை பிறரிடம் பரிமாறிக் கொள்ளாமல் (சேப்) பாதுகாப்பாக இருக்க வேண்டும். இமெயில் முகவரி, போட்டோ, செல்போன் எண், பள்ளியின் பெயர் போன்ற தகவல்களை தெரிவிக்க கூடாது. மீட் என்கிற போது பல்லூடகத்தின் வழியே அறிமுகமில்லாத ஒருவரை சந்திக்க நேரிடுவது மிகவும் ஆபத்தானது. பெற்றோர், பாதுகாவலரின் துணையுடன் தான் செய்தல் வேண்டும்.
-மெயில் இன்னல்கள்

                     அக்ஸ்செப்ட்டிங் என்கிற போது அறிமுகம் இல்லாதவர்களின் இமெயில் தகவல்கள், போட்டோக்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வது பிரச்னைகளை உண்டாக்கிவிடும். இந்த தகவல்களை வைரசாக தேவையில்லாத தகவல்களாக இருக்கலாம். ரிலையபிள் என்கிற போது தகவல்களை பல்லூடகத்தில் பார்க்க நேரிடும் போதும், உண்மை தகவல்களா, நம்பகத்தன்மையான நபர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். டெல் என்கிற போது அசவுகரியமான, துன்பப்படும் படியான செயல்களை பல்லூடகம் வாயிலாக உங்களுக்கு ஒருவர் கொடுக்கும் போது உடனடியாக பெற்றோர், பாதுகாவலர், நம்பகத்தன்மையான, உண்மையான நபர்களிடம் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற தகவல்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். இது தான் இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

No comments:

Post a Comment