Tuesday 29 October 2013

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராக உத்தரவு


             நீதிமன்ற அவமதிப்பு  வழக்கில் நேரில் ஆஜராக மாநில உயர்கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளதுதிண்டுக்கல் மாவட்டம், பழநி பழைய ஆயக்குடி உச்சமன்புதூரை சேர்ந்த வினோத் ஐகோர்ட்
கிளையில் தாக்கல் செய்த மனு: நான் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஏ (இங்கிலிஷ் வித் கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன்) படித்துள்ளேன். 2012ல் பிஎட் முடித்தேன். கடந்த 2012, அக். 14ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். ஆனால் எனக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. பிஏ ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிக்கேசன் படிப்பு, பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது இல்லை என்பதால் பணி வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

                      இப்படிப்பு பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை கவனத்தில் எடுக்காமல் என்னை ஆசிரியர் பணிக்கு நிராகரித்துள்ளனர். இதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்«ன். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் படிப்பு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் விசாரித்து 12 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, பிஏ ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிக்கேசன் படிப்பு, பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது என பள்ளி கல்வி செயலாளர் ஏப்ரல் 30ல் உத்தரவிட்டார். அதன் பிறகும் என்னை பட்டதாரி ஆசிரியராக நியமிக்கவில்லைஐகோர்ட் கிளை உத்தரவை உயர்கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, உயர் கல்வி செயலாளர் சபிதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் 2 வாரத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment