Saturday 26 October 2013

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க,சிறப்புத் திட்டம்


               "பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கஇந்தாண்டு முதல் சிறப்புத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது,''  என்றுபள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறையில் தணிக்கை தடைகள் ஏற்படாமலும்,நிர்வாக ரீதியாகவும்
தலைமையாசிரியர்களின் பணி எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தணிக்கை அதிகாரிகளுடன் மதுரையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து அனைத்து தலைமையாசிரியர்களுக்கும்சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்ககல்வித் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனகுறிப்பாகபள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு சிறப்பு "கவுன்சிலிங்அளிப்பதற்காக, 10 "மொபைல்வேன்கள் துவக்கப்பட்டுள்ளன. தேர்வில் குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பது இந்த "கவுன்சி லிங்'முறையால் தவிர்க்கப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு திட்டம்: காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் (ஸ்லோ லேனர்ஸ்) பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாடவாரியாக சிறப்பு கையேடுகள் தயாரித்து வழங்கவும், 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் இருந்து சிறப்பு ஆசிரியர்கள் குழு ஏற்படுத்திசிறப்பு வகுப்புகள் நடத்தும் திட்டம் இந்தாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காகமாவட்ட அளவில் சிறப்பு ஆசிரியர்கள் குழுக்கள் ஏற்படுத்தப்படவு உள்ளன. மாணவர்களுக்கு வழங்கப்படும் 14வகையான நலத்திட்ட பொருட்களை வைப்பதற்கு மாவட்டங்கள் தோறும் அரசு குடோன்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆய்வு செய்யப்படும்.

                          மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில்ஆண் ஆசிரியர்களும்,மாணவிகள் மட்டும் படிக்கும் பள்ளிகளில்ஆசிரியைகளை மட்டும் நியமிக்க வேண்டும் என்ற அரசு உத்தரவுநடப்பாண்டு முதல் தீவிரமாக்கப்படும். இதன்மூலம் ஆசிரியர்கள்- மாணவர்கள் இடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படும். மாநிலம் முழுவதும்650 உயர் நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே கோர்ட் உத்தரவிற்கு பின் தான் நடவடிக்கை எடுக்கப்படும்என்றார். முன்னதாகசென்னை,கோவைமதுரை ஆகிய மண்டலங்களின் தணிக்கை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

No comments:

Post a Comment