Saturday 26 October 2013

பண்டிகை முன்பணம் வழங்க மறுப்பு தமிழக முதல்வர் தலையிட அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள்



             தமிழக அரசு ஊழியர் களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுமென தமிழக முதல்வர் கடந்த ஆண்டு தெரிவித்தார். அதனடிப்படையில் பல பண்டிகை களுக்கு ஏற்கனவே ரூ.5 ஆயிரம் முன்பணம் வழங்கப் பட்டுள்ளது.ஆனால் தற்போது போதுமான பணம்
ஒதுக்கீடு இல்லை எனக் காரணம் கூறி கருவூலங்களில் பல துறை அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் வழங்க மறுத்து வருகின்றனர். இதுதொடர்பாக அரசுத்துறைகளின் தலைமை அலுவலர்களை தொடர்பு கொண்டால் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை எனதெரிவித்து வருகின்றனர். இத னால் அரசு ஊழியர்கள் மிகுந்த அதிருப்தியும், வேதனையும் அடைந்துள்ளனர். முன்பணத்திற்கு போதுமான நிதி வழங்க வேண்டியது அரசின் கடமை என்பதை வலியுறுத்துகிறோம். எனவே, தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலைமையில் தமிழக முதல்வர் தலையிட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் வழங்கிட ஆவன செய்து உதவுமாறு கேட்டுக் கொள் கிறோம்.மேற்கண்டவாறு சங் கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி, பொதுச்செயலாளர் இரா.பால சுப்பிரமணியன் ஆகியோர் அறிக்கை ஒன்றில் கூறியுள் ளனர்.

No comments:

Post a Comment